கோடைகால சீசனையொட்டி உதகை சிறப்பு மலை ரயில் சேவை வரும் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , உலக புகழ்பெற்ற உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு உதகை சென்றடையும். உதகை கோடை சீசனை யொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் கடந்த 1 மாதமாக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த ரயில் சேவை வருகிற ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து மலை ரயிலில் பயணிப்பதால் அவா்களின் வசதிக்காக சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.

எனவே இதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் மலை ரயில் பகல் 2.45 மணிக்கு உதகை சென்றடையும். இதேபோன்று ஜூலை 2ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் உதகையிலிருந்து முற்பகல் 11.25 மணிக்கு ப் புறப்படும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மேலும் தினசரி இயக்கப்படும் உதகை மலை ரயிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதுபோல, இந்த சிறப்பு ரயிலுக்கும் (வண்டி எண் 06171, 06172 ) ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.