இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பதவி ஏற்றார்..

தமிழ்நாடு: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் அவர் இனி எடுக்கும் முடிவுகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது, இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது, ஒருங்கிணைப்பாளர் ,இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.


இதையடுத்து இதே தீர்மானங்கள் தற்போது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனால் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.


அதன்படி எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்தே கட்சியில் சில புதிய நிர்வாகிகளை நியமிக்கும் முடிவாக இருக்கும் என்கிறார்கள். அதாவது புதிய பொருளாளர், தலைமை குழு தலைவர் ஆகிய பதவிகளுக்கான நிர்வாகிகளை புதிதாக எடப்பாடி நியமிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான கையெழுத்து போட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

அதோடு கட்சி விதிகளை மீறியதாக கூறி ஓ பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடுத்ததாக கூறி ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி ஆக்சன் எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்கான கையெழுத்தையும் அவர் போட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.