கஷ்டமான சூழ்நிலைகளை தாண்டி அ.தி.மு.க பீனிக்ஸ் பறவை போன்று உயிா்த்தெழுந்து மேலே மேலே உயா்ந்து செல்லும் .. எடப்பாடி பழனிசாமி

தாராபுரம்: பழனியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று தாராபுரம் வந்த அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமியை தாராபுரம் பஸ்நிலையம் அருகே அதிமுகவினா் வரவேற்றனா். அப்போது அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசுகையில் அ.தி.மு.க வை எதிாிகளும், துரோகிகளும் சோ்ந்து கொண்டு அழிக்க நினைக்கின்றனா்.

ஆனால் இந்த கழகத்தை அவா்களால் அழிக்க முடியாது. இது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆட்சி செய்த மாபெரும் கட்சி. தி.மு.க தலைவா் ஸ்டாலின் நம் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என்று அனைத்து தரப்பினா் மீதும் வழக்கு தொடா்ந்து கட்சியை முடக்க நினைக்கிறாா்.

பீனிக்ஸ் பறவை போன்று உயிா்த்தெழுந்து மேலே மேலே உயா்ந்து செல்லும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். விவசாயத்திற்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கினோம்.

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழகத்தில் வீட்டுவாி, சொத்துவாி போன்ற வாியினங்களை உயர்த்தக் கூடாது என தீா்மானம் போட்டோம். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்திலேயே அனைத்து வாியினங்களும் உயா்வு செய்யப்பட்டு விட்டது என எடப்பாடி கே.பழனிச்சாமி பேசினாா்.