சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 6 ) அன்று மின் விநியோகம் தடை

சென்னை: அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் அனைவருக்கும் பயன்படுகிறது. இந்த நிலையில் மின் கம்பங்களில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஆகிய காரணத்தால் விபத்துக்கள் ஏற்படக் கூடும். எனவே மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டு வருகின்றது. அந்த வகையில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது.

அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, அண்ணா சாலை பகுதியை சார்ந்த வெங்கடேச கிராமணி தெரு, புது பங்களா, நாகமணி தெரு, ECR சாலை.

மேலும் ஐயா சாமி தெரு, முனியப்பிள்ளை தெரு, லாசர் சர்ச் தெரு, மற்றும் உலகப்பா தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், பெரம்பூர் பகுதியைச் சார்ந்த டீச்சர்ஸ் காலனி, வில்லிவாக்கம் சாலை, சாரதி நகர், சரஸ்வதி நகர், கலைமகள் நகர், கடப்பா சாலை போன்ற பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதை அடுத்து பொன்னேரி பகுதியை சார்ந்த தேர்வாய் கண்டிகை, கரடிபுதுர், ஜி.ஆர் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம் பகுதியை சார்ந்த முடிச்சூர் காமராஜ் நெடுஞ்சாலை, புதிய பெருங்களத்தூர் கஜபுஜெந்தர் நகர், சித்ரா அவென்யூ, எம்.கே.பி நகர், எஸ்.வி.ராகவன் ரோடு வண்டலூர் கலைஞர் நெடுஞ்சாலை – 1 முதல் 7வது தெரு, சேகர் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குண்டுமேடு குறிஞ்சி நகர், செல்வ விநாயகர் கோவில் தெரு, சீனிவாச நகர், ஜவகர்லால் தெரு, புத்தர் நகர், சத்யமூர்த்தி ரோடு, ராஜாமணி தெரு, மணிமேகலை தெரு போன்ற இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.