தமிழகத்தில் நாளை மின் விநியோகம் தடை செய்யபடாது .. மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் தவறாது மின் பரபரப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இத்தகைய பணிகளின் போது அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

தினந்தோறும் மின்தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நடப்பு மாதம் தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவில்லை. தற்போது மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உதவும் வகையில் 24 மணி நேரமும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நாளை (மார்ச் 31) தமிழகத்தில் மின் விநியோகம் தடை எந்த பகுதியிலும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மாத இறுதி நாளான நாளை மின்தடை இல்லை என்பதால் இல்லத்தரசிகளும், அலுவலக பணியாளர்களும் மின் சார்ந்த பணிகளை முடித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.