வேலூர் மாவட்டத்தில் வருகிற 3 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் : இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். எனவே இதன் காரணமாக நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி நாடு முழுவதும் பொதுமுடக்கம், ஊரடங்கு, தனியார் நிறுவனங்கள் போன்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டது.

எனவே இதன் காரணமாக நாட்டில் வேலையின்மை உயர தொடங்கியது. படித்த இளைஞர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை அடுத்து தற்போது நாட்டில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிக அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் செப். 3ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனத்துக்கு 12ம் வகுப்பு கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 20 வயது பெண்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து வேலைவாய்ப்பு முகாம் 3 ம் தேதி வேலூரில் உள்ள ஈ.வெ.ரா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.