இந்த குறிப்பிட்ட ரயில்களின் இயக்கம் நீட்டிப்பு

சென்னை: ரயில்வே வாரியம் தான் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. அரசிற்கு அதிக வருவாயை அளிக்கும் ரயில்வே துறையின் சேவைகள் அனைத்தும் சமீப காலமாகவே அதிகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் முக்கிய ரயில் சேவைகளை தவிர மற்ற அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. தற்போது தான் வழக்கம்போல அனைத்தும் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர ரயில் (07356) சேவை குறித்த முக்கிய தகவலை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. எனவே அதன்படி, ஹூப்ளி – ராமேஸ்வரம் ரயில் (07355) சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15க்கு ராமேஸ்வரம் வரும்.

இதனை அடுத்து ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25க்கு ஹூப்ளி சென்று சேரும். முன்னதாக இந்த ரயிலோ சேவையானது ஜனவரி 8ம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 26ம் தேதி வரை இந்த ரயில்சேவை நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.