அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் அமலாக்கத்துறை விசாரணை


சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முதன்மை நீதிமன்றம் அனுமதியளித்தது.

எனவே இதன் காரணமாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை நேற்று முதலே காவலில் எடுத்துள்ளது. வருகிற 12 -ஆம் தேதிவரை அமலாக்கத்துறை காவலில் அமைச்சர் செந்தில்பாலாஜி இருப்பார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 2-வது நாளாக இன்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. உச்சநீதிமன்ற அனுமதியை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 10 மணி நேரத்தைக் கடந்து விடிய விடிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து மொத்தம் 200 கேள்விகள் கேட்க முடிவெடுக்கப்பட்டு உள்ள நிலையில் நாளொன்றுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை விசாரணை நடப்பதால் சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு உள்ளது.