மெலனியாவின் சொந்த ஊரில் வைக்கப்பட்ட அவரது மரச்சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவின் மரச்சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்தவர். அமெரிக்க அதிபரை மணந்திருந்ததால், மெலனியாவின் சொந்த ஊரான செர்வின்காவில் கடந்த ஜூலை 4- ந் தேதி அவருக்கு மரத்தினாவ் ஆன சிலை வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

அமெரிக்க சுதந்திர தினத்தன்று மெலனியாவுக்கு சிலை வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. சிலை நிறுவப்பட்ட அடுத்த நாளே, சிலர் மெலனியாவின் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால், அலங்கோலமான சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சிலை வடிவமைப்பாளரான பிராட் டவ்னி மெலெனியாவின் சிலையை வடிவமைத்திருந்தார். இது குறித்து, டான் பிரவுனி போலீஸிலும் புகாரளித்துள்ளார்.

பிராட் டவ்னி கூறுகயில், ''மெலனியாவின் சிலையை ஏன் அவர்கள் உடைத்தார்கள் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். மெலனியாவின் சிலை உடைக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதுவரை, யாரும் கைது செய்யப்படவில்லை.

யூகோஸ்லேவியாவில் இருந்து ஸ்லோவேனியா தனி நாடான போது, 1990- ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் மெலனியாவின் குடும்பம் குடியேறியது. தற்போது 50 வயதான மெலனியா, மாடலிங் பணியில் ஈடுபட்டவர் . 2005- ம் ஆண்டு டிரம்பை திருமணம் செய்து கொண்டார்.

அதனால், சொந்த நாடானா ஸ்லோவேனியாவிலும் மெலனியா பிரபலமடைந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்லோவேனியா தலைநகர் லியுப்லியானாவில்,டொனால்ட் டிரம்பின் மரத்தினாலான சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால், டிரம்பின் சிலையும் அகற்றப்பட்டது.