கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு

சென்னை: கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளனமான குழந்தைகள் தவித்தனர். அந்த சூழலில் தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அந்த வகையில், தாய், தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, 5 லட்சம் ரூபாயும், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

இதனையடுத்து இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிப்பை தொடருவதை உறுதி செய்ய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.