அடுத்த மாதம் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு; அமைச்சர் வீரமணி தகவல்

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு... கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த மாதம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனியார் மண்டபத்தில் ரோட்டரி சங்கம்,யூனியன் பார்மா மற்றும் சுவாமி மெடிகல்ஸ் இணைந்து கொரோனா வைரஸ் கட்டுபடுத்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
ரூ.1 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரம் கபசுரக் குடிநீர் பாக்கெட்களை 3000 நபர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே. சி. வீரமணி பொதுமக்களுக்கு வழங்கினார்.

வேலூர் மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வரும் பொதுமக்களால் தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த மாதமும் ஊரடங்கு உத்தரவு நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் கே சி வீரமணி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் வெளி மாவட்டத்திலிருந்து வரும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி சட்டத்தை மதித்து நோய் தொற்று தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முக கவசம் அணிந்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பத்திரப் பதிவு செய்ய ஊரடங்கு உத்தரவால் வெளியிலிருந்து வரும் நபர்கள் வந்து பத்திரபதிவு செய்ய முடியாத சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.