புதுச்சேரியில் மின்நிலையம் முன்பு போராட்டம் நடத்த தடை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்நிலையம் முன்பு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் கூட்டாக போராட்டக்குழு அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை மின்வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது என தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளது.

மின் நிலையம் முன் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில்,மின் நிலையம் பொது சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, மின் நிலையம் முன் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. எனினும், இந்த தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவை வட்டாட்சியர் உத்தரவின்படி, புதுவை மின்சாரம் பொதுப்பணித்துறை நிறுவனமாகத் தொடர்கிறது. இந்த அறிவிப்பு 19.1.23 முதல் 18.7.2023 வரை அமலில் இருக்கும் என மின்வாரிய துணை செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புதுவை மின் நிலையம் முன்பு போராட்டம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது