தமிழகத்தில் 1,771 பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்தாண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அதன்படி, பிஎஸ்6 வகை குளிர்சாதனமில்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 402 பேருந்துகள், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு 347, சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு 303, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு 115, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு 303, மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு 251, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு 50 பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. இதையடுத்து இது தொடர்பான விவரங்கள் www.tenders.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பழைய பேருந்துகளோடு ஒப்பிடும்போது இந்த பேருந்துகளில் சிறிய அளவில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் வழக்கமாக ஏறி, இறங்க 3 படிகள் உள்ள நிலையில் இவற்றில் 2 படிகள், பேருந்துகளை முழுமையாகக் கண்காணிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் என நவீன வசதிகளோடு பேருந்துகள் வலம் வரவுள்ளன.

பேருந்துகளைத் தயாரித்து வழங்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் தகுதி பெற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எனவே இதற்கான அவகாசம் ஜூலை 5-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.