வாரணாசியில் நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்களுக்கான கேபிள் கார் போக்குவரத்து

வாரணாசி: நாட்டிலேயே முதன்முறையாக பொது மக்களுக்கான கேபிள் கார் போக்குவரத்து வாரணாசியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி உறுப்பினராக உள்ளார். பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.

நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்களுக்கான கேபிள் கார் போக்குவரத்து வாரணாசியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.644.49 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு வரும் 24ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவர் அபிஷேக் கோயல் கூறுகையில், இந்த வழித்தடம் போக்குவரத்து மிகுந்த கண்டோன்மென்ட் ரயில் நிலையம் (வாரணாசி சந்திப்பு) முதல் கோடாவ்லியா கிராசிங் வரை இருக்கும்.