கடலூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

கடலூர் : நேற்று (08.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் பிப்பர்ஜாய் இன்று காலை 08:30 மணி அளவில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து,

கோவாவிலிருந்து மேற்கே சுமார் கிலோமீட்டர் தொலைவில், மும்பையிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 830 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 36மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த 3 தினங்களில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுயிருந்தது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணத்தால் மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.