மீனவர்கள் இந்த குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம்

சென்னை: தமிழகம் முழுவதும் மழையும், வெயிலும் மாறி மாறி மக்களை வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அடுத்து வரும் 2 நாட்கள் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிப்பு ...

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூலை 22ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதனை அடுத்து சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வங்க கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தென் இலங்கை கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீச கூடும்.

இந்த நிலை வருகிற ஜூலை 20ஆம் தேதி வரை நிலவக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.