மீனவர்கள் இந்த நாட்களிலில் கடலுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது : - சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. வெப்பநிலை அதிகபட்சமாக 30-31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ்‌ என்ற அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இதனை அடுத்து இன்றும், நாளையும் மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அதனை தொடர்ந்து அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

மேலும் 16 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. அதனால் மீனவர்கள் மேற்கண்ட நாட்களிலில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.