செம்பரம்பாக்கம் நீர் திறப்பால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சென்னைக்கு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ... சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நீர் இருப்பை கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி - 9 செ.மீ., சோழவரம் - 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியிலிருந்து 663 கன அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடி உயரம் உள்ள ஏரியில் 22.29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

இந்அ நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.