ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலானதை தொடர்ந்து, தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்

சென்னை : சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கான 2-வது மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆளுநர் இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஒப்புதல் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த தடை சட்டத்திற்கான தமிழக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசிதழில், ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களுக்கான தண்டனைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்து.

அதாவது, ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களுகு 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.5000 அபராதம் அல்லது 2 தண்டனைகளும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சட்டத்தை உடனே அமலுக்கு கொண்டு வர தடை செய்ய வேண்டிய கேம் பட்டியலை காவல்துறை தயார் செய்தனர்.

மேலும் தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டம் விளையாட முயற்சித்தால் எச்சரிக்கை தகவல் காட்டும். இதனை மீறி விளையாடினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.