நாளை தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் .. உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை: அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் .... தமிழகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நாளை போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

அதனால் ரேஷன் கடைகளில் வேலை பாதிக்கப்படாமல் இருக்க கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதையடுத்து அதில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கின்றனர். அவர்கள் சென்னையில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர்.

அதனால் நாளை முதல் ரேஷன் கடைகளில் முன்னெச்சரிக்கையாக பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.