பாகிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கும் உணவு வழங்குவதில் சிக்கலாம்

இஸ்லாமாபாத்: ராணுவ வீரர்களுக்கும் உணவு இல்லையா?... பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எனவே உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இதனிடையே அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.