கடந்த சில மணி நேரம் WhatsApp செயலி சேவைகள் முடக்கம் .. பயனாளிகள் கடும் அவதி

இந்தியா: பயனாளிகள் கடும் அவதி ....... உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல வகையான செயலிகளை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்துகின்றனர்.

இதனை அடுத்து இதில் தனிநபர் மட்டுமல்லாமல் குழுவாக இணைந்தும் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் வசதிகளும் உள்ளது.எனவே அதன்படி இந்த குழுவில் 1000க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கொள்வதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயலியில் தினமும் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதுப்புது அப்டேட்களை WhatsApp நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிற்கு நாம் எமோஜிகளை அனுப்புவதற்கான வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற பல வசதிகள் வர இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களாக WhatsApp செயலியின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் WhatsApp பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.