இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி

ஈரோட்டில் இன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்து, முதல்வா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து இந்த மாதம் 1-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து துவங்கியது.

இந்நிலையில் இன்று ஈரோட்டில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

லக்காபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த நகரப்பேருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1-ந்தேதி முதல் அரசுப்பேருந்து சேவை தொடங்கிய நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.