அசத்தல் வெற்றி... அர்கான்சஸ் மேயர் ஆன இளம் மாணவர்; குவிகிறது பாராட்டுக்கள்

அர்கான்சஸ்: அமெரிக்காவில் இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த கல்லூரி மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேயர் பணியை பார்த்துக் கொண்டே மேற்படிப்பையும் தொடர்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அர்கான்சஸ் மாகாணத்தில் இயர்லே நகர மேயர் தேர்தல் நடந்தது. இதில் 18 வயது நிறைந்த கல்லூரி மாணவர் ஜெய்லன் ஸ்மித் என்பவர் போட்டியிட்டார். தொடர்ந்து வெளியான தேர்தல் முடிவுகளில் மாணவர் ஜெய்லன் ஸ்மித் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட நெமி மாத்யூஸ் தோல்வியை தழுவினார். மேயர் பணியை செய்து கொண்டே அர்கான்சஸ் பல்கலைக்கழகத்தில் தமது கல்வியையும் தொடர முடிவு செய்து இருப்பதாக கூறியுள்ளார்.

மிக இளம் வயதில் மேயர் ஆனவர் என்ற பெருமையையும் ஜெய்லன் பெற்றுள்ளார். இதையடுத்து இவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.