இனி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: விரைவில் பாக்கெட்டுகளில் விநியோகம் ... தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2023ம் ஆண்டு கடந்த 9-ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் நாள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஆரம்பித்தது. அதன்பிறகு, அனைத்து துறைகளையும் சேர்ந்த அமைச்சர்கள் துறைவாரியாக தங்களின் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்கள்.

இதையடுத்து அந்த வகையில் இன்றைய சட்டமன்றத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்வது பற்றி எழுந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

எனவே அதன்படி, இனி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்வதற்கு முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

மேலும், கைரேகை மூலம் பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மூலமாக கைரேகை பதிவை சரியாக அளிக்க முடியாத முதியவர்கள் பலர் பலனடைவார்கள் ஏன் எதிர்பார்க்கப்படுகிறது.