சிங்கப்பூர்-இந்தியா இடையே மீண்டும் முழு விமான சேவை அக்டோபர் 30 முதல் அமல்

சிங்கப்பூர்: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக இந்தியா-சிங்கப்பூர் இடையிலான விமான சேவை 2 ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பயணிகள் விமான சேவை உயர்த்தியுள்ளது.

மேலும் வரும் அக்டோபர் 30 முதல் முழு அளவிலான விமான சேவை தொடங்கப்படும் என சிங்கப்பூர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி முதல் மீண்டும் முழு அளவிலான பயணிகள் விமான சேவை மேற்கொள்ளப்படும். கொரோனாவுக்கு முன் இயங்கியது போல, முழு அளவில் பயணிகள் விமான சேவை மேற்கொள்ளப்படும்.

இதன்படி தற்போது சென்னைக்கு வாரத்தில், 10 முறை மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் விமான சேவை அக்டோபர் 30 ஆம் தேதி முதல் 17 ஆக உயர்த்தப்படும் எனவும் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை, 7-ல் இருந்து 14 ஆக உயர்த்தப்படும். எனவும் கூறப்பட்டுள்ளது.