உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தை கடந்தது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,57,748ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 12 லட்சம் வந்துவிட்டால் ஒரு கோடி வந்துவிடும் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு கோடியை நெருங்கிவிடும் என்றும் வல்லுனர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46,25,445ஆக உயர்ந்துள்ளது என்பது ஒரு ஆறுதலான விஷயம் ஆகும்.

ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,519ஆக உயர்ந்துள்ளது ஒரு அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். உலக அளவில் அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 22,97,190ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,407ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் 10,38,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 569,063 பேர், பிரேசிலில் 10,38,568 பேர், இந்தியாவில் 395,812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இங்கிலாந்தில் கொரோனாவால் 301,815 பேர், ஸ்பெயினில் 292,655, பெருவில் 247,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.