உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,77,57,513 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,82,998 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேதான் உள்ளது. இன்னும் குறைவாக நிலையே தொடர்கிறது.

இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில் கொரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது.

உலக அளவில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 11,840 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,77,57,513 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 801 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்டு மொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6,82,998 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1,11,60,193 போ குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 59,14,322 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 65,603 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.