உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.71 கோடி ஆனது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.71 கோடியாக உயர்ந்து உள்ளது அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டி உள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்களின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.71 கோடியாக உயர்ந்து உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1.06 கோடியாக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.69 லட்சமாக அதிகரித்து உள்ளது.

சீனாவில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 84,060 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 66,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45.67 லட்சமாக உயர்ந்து உள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது. நாட்டின் 50 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 1,000க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளன என கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை போலீசில் ஆரம்பத்தில் தினசரி 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 8 போலீசார் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னை போலீசில் 1,678 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் தொற்று பாதிப்பை விட குணம் அடையும் போலீசார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று 34 போலீசார் குணம் அடைந்தனர். இதுவரை சென்னை போலீசில் 1,678 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியதில் 1,279 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.