ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆடு ஒன்று 2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவென்று தெரியுங்களா.
இந்த ஆடு மிக விரைவாக வளர்வதாகவும், இக்காரணத்தினாலேயே இவ்வளவு அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த எலைட் ஆஸ்திரேலியன் ஒயிட் சிண்டிகேட் என்ற நான்கு பேர் கொண்ட குழு தான், இந்த ஆஸ்திரேலிய ஒயிட் ஸ்டட் இன ஆட்டினை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இது குறித்து டிஎன்ஏ இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த
செம்மறி, குழுவில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும். இந்த செம்மறி
ஆட்டின் மரபியல் அமைப்பு (ஜெனெட்டிக்ஸ்) மற்ற செம்மறி ஆடுகளை வலுப்படுத்த
பயன்படும். இந்த செம்மறி ஆடு அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது.
அதிலும் இந்த குறிப்பிட்ட செம்மறி ஆடு மிக வேகமாக வளர்கிறது எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் முன்னதாக ஆடு
ஒன்றை இவ்வளவு விலைக்கு விற்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக ஆட்டின்
உரிமையாளர் கிரஹாம் கில்மோர் என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே
போல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டபுள் டைமண்ட் எனும் ஆடு 3 லட்சத்து 50 ஆயிரம்
கினியாக்கள் அதாவது 3.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்தது
குறிப்பிடத்தக்கது.