சிறந்த பணியாளர் விருது வாங்கியவரையும் பணிநீக்கம் செய்த கூகுள்

நியூயார்க்: சிறந்த பணியாளர் விருது வாங்கியவரின் நிலை... கூகுள் நிறுவனத்தில், 'சிறந்த பணியாளர்' என்று விருது வாங்கியவரை பணியில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, அவர் தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில், உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய்வர்கியா என்பவரையும், அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கி உள்ளது.

இவர் அந்நிறுவனம் சார்பாக 'சிறந்த பணியாளர்' விருதையும் வாங்கியுள்ளார். இந்நிலையில், 'சிறந்த பணியாளர்' என்று விருது வாங்கிய அவரையும் பணியில் இருந்து கூகுள் நீக்கியதையடுத்து, ஹர்ஷ் விஜய்வர்கியா ஒரு உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

நான் ஏன்? திறமைக்கு இடம் இல்லையா...? என்று குறிப்பிட்டு அந்த பதிவை போட்டுள்ளார். இவரது இந்த உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.