பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்- ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வடகிழக்கு பருவமழை குறித்து அவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

சென்னையில் 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

தூத்துக்குடி, மதுரை, நெல்லை, விருதுநகர், கோவை போன்ற மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.