தமிழக அரசு ஊழியர்களுக்கு முழு நேரமும் மாஸ்க் அணிய வேண்டும்...தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை எச்சரித்திருந்தது.

கொரோனா தொற்று இருந்தாலும் அதிகரித்தபடியே இருப்பதால் கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,400 ஆக அதிகரித்துள்ளது.

முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடித்தாலே ஓரளவுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலும் மக்கள் பொது இடங்களில் மற்றும் அலுவலகங்களில் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றுகிறார்களா என்பதனை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முழுநேரமும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.