தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியீடு


தமிழகம்: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு போன்ற அனைத்து ரேஷன் கடை பொருட்களும் பொதுமக்களுக்கு மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் நியாய விலை கடை ஊழியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைத்து பொது மக்களுக்கும் ஒரே மாதிரியாக பொருட்களை வினியோகம் செய்வது என அனைத்து தொடர்பான பணிகளையும் ரேஷன் கடை ஊழியர்கள் முறையாக கவனித்துக் கொள்கின்றனர்.

இந்த ரேஷன் கடை ஊழியர்களின் சிறப்பான பங்கை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கலாம் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்தது போன்று தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பை உணவு மற்றும் உணவுத்துறை வழங்கல் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களின் செயல்திறனை பாராட்டி மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.