அரசாணை வெளியிட அரசுக்கு அதிகாரம் உண்டு: ஆர்.எஸ்.பாரதி தகவல்

சென்னை: அரசாணை வெளியிட அரசுக்கு அதிகாரம்... அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பாக அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

சென்னையில் தி.மு.க. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பி.டி.ஆர். ஆடியோ விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் பதறும் கட்சிதான் திமுக என்று கூறியுள்ள அவர், கட்சித் தலைவி மருத்துவமனையில் இருந்த போது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்ட கூட்டம் தி.மு.க. அல்ல என்று விமர்சித்துள்ளார்.

கனிமொழி திகார் சிறையில் இருந்த போது ஸ்டாலின் பார்க்கவில்லை என்று கூறுவது பொய்யானது என்றும், பா.ஜ.க மிரட்டலுக்கு பயந்து மாற்றுக் கட்சிக்கு எம்.பி. பதவியை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.