தமிழகத்தில் திரையரங்கம் செயல்பட வழிகாட்டு நெறிமுறை

வழிகாட்டு நெறிமுறைகள்... தமிழகத்தில் திரையரங்கம் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்கில் செயல்படுவதற்கு வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்குவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக 10 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் திரையரங்குகள் செயல் படலாம் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில் எஸ்.ஓ.பி என்று சொல்லக்கூடிய விதிமுறை அடங்கிய வழிகாட்டு நெறிமுறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன ? நடைமுறைகள் என்னென்ன ? என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள திரையரங்குகளுக்கு செயல்பட அனுமதி இல்லை. திரையரங்க வளாகம், அமரும் இடம் மற்றும் திரையரங்கை சுற்றியுள்ள இடங்களில் 6 அடி தனிமனித இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிவது அவசியம். திரை அரங்கிற்கு வெளியேயும், திரையரங்கில் உள்ள பொது இடங்கள், காத்திருப்பவர்கள் என எப்போதும் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஆறு அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

திரையரங்கு வளாகத்தில் எப்போதும் முக கவசம் அணிவது கட்டாயம், திரையரங்க வளாகம் மற்றும் அங்குள்ள பொது இடங்கள், திரையரங்க நுழைவு வாயில், வெளியேறும் இடங்களில் கைகள் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு சொல்லியுள்ளது.