ஆளுமை திறமை குறித்து தெரிவிக்கவே ஒப்பிட்டார்... வானதி சீனிவாசன் விளக்கம்

கோவை: தவறே இல்லை... மறைந்த முன்னள் முதல்வர் ஜெயலலிதாவோடு அண்ணாமலை தன்னை ஒப்பிட்டதில் தவறு இல்லை. தனது ஆளுமைத் திறமை குறித்து தெரிவிக்கவே அவர் அவ்வாறு பேசினார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

மகளிர் தினத்தை ஒட்டி, கோவையில் ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் பயிற்சி வழங்கும் விழாவில் பங்கேற்ற வானதி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தற்போது உணர்வு பூர்வமாக நிலைமை சரியில்லை என்றாலும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது.

தனது ஆளுமைத் திறமை குறித்து தெரிவிக்கவே பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுடன் ஒப்பிட்டு கூறினார் என குறிப்பிட்டார்.