அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: ஜாமீன் மனு இன்று விசாரணை ... சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை ஏற்கெனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையுடன், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது.

இதனை அடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி இருமுறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நேற்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் முறையீடு செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி, ஜாமீன் கோரும் மனுவை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து உள்ளார்.