இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இதனையடுத்து இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 16.09.2022 மற்றும்‌ 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் 18.09.2022 மற்றும்‌ 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.20.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவித்துள்ளது