6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு

கனமழை பெய்ய வாய்ப்பு... தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிடின் காரணமாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலூர், தர்மபுரி, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மதுரை மாநகரப் பகுதிகளிலும், பரவை, சமயநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், முத்துகாளிபட்டி, உள்ளிட்ட பகுதிகளிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவியது.