தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்ட்டுள்ளது,

இதனை அடுத்து வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மீனவர்களுக்கான எச்சரிக்கை : இன்று குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதி, இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல், இலட்சத்தீவுகள், மாலத்தீவுகள் பகுதியில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ வேகம் முதல் 50 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.