இன்று தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கனமழைக்கு வாய்ப்பு ..... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதையடுத்து நேற்று மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றிய அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரள பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சியின்‌ காரணமாக இன்று தென்‌ தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, வடதமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக திண்டுக்கல்‌,தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மறுநாள் முதல் டிசம்பர் 3ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.