இந்திய வானிலை மையம் விடுத்துள்ள மிக கனமழை எச்சரிக்கை

மிக கனமழை பெய்யும் வாய்ப்பு... தமிழகத்தில் இன்று சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. மேலும் ஆந்திராவின் விசாகப்பட்டினதிற்கு தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலமானது நாளை இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டி கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கோவை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி அந்தமான் பகுதியில் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.