நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்யும் கனமழையால் 60 பேர் பலி

கடந்த 4 நாட்களில் மட்டும் நேபாளத்தில் பலத்த மழை, வெள்ளத்துக்கு 60 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். பள்ளிகள், சமூக நல மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர் மழை காரணமாக, நாடு முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். காணாமல் போன 41 பேரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.