தலைநகர் டெல்லியில் இன்று பலத்த காற்றுடன் கனமழை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது கோடை காலம் என்பதால், மக்கள் வெயிலின் தாக்கம் காரணமாக அவதியடைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ், கடும் வெயில் மக்களை அவதியடைய செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது.

வெப்பம் அதிகரித்தாலும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முதல் மும்பையில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு வெப்பம் தணிந்துள்ளது.

தற்போது டெல்லியில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் அங்கு மழை பெய்துள்ளது, கொரோனா பரவலை அதிகரிக்குமா என அச்சமும் எழுந்துள்ளது. இருப்பினும் மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ள மக்கள் வெப்பத்திலிருந்து சற்று தணிந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மஹாராஷ்டிராவில் கடந்த வாரம் பெய்த கனமழையால் கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயமடைந்தனர். மும்பையிலும் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தற்போது டெல்லியிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் நேற்று இரவு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.