இங்கு வழக்கத்தை விட அதிகமான குளிர் மற்றும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடும் அவதி

திருப்பூர்: வழக்கத்தை விட அதிகமான குளிர் மற்றும் பனிப்பொழிவு ..... தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும்.

இந்நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. ஆனால் திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளான அவினாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர், பல்லடம், மங்கலம், ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளிலும் கடந்தாண்டுகளை விட வழக்கத்திற்கு மாறாக குளிரும், பனிப்பொழிவும் மிக அதிகமாக உள்ளது.

இதனை அடுத்து தினமும் மாலை 6 மணிக்கே ஒரு குளிர்ச்சியான காலசூழ்நிலை நிலவுவதுடன், காலை 8 மணி வரை கடுங்குளிர் நிலவுகிறது.

இதேபோன்று பனிப்பொழிவும் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் புறநகர் பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அளவுக்கு அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது.