இங்கு மாணவர்களின் ஆளுமையை கெடுக்கும் வார்த்தைகளை ஆசிரியர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு

கேரளா : கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார், மேடம் என அழைக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்களிடையே பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாணவர்கள் ஆசிரியர்களை பாகுபாடின்றி டீச்சர் என்றே அழைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசும் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் போடா, போடி என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து இது மாணவர்களின் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது. அதனால் ஆசிரியர்கள் பள்ளிகளில் “போடா, போடி” என்ற வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருவனந்தபுரத்தில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு படிப்படியாக மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.