யமுனை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு... டெல்லியின் யமுனைக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பு குடியிருப்புகளை மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று நாட்களுக்குப் பிறகு வீடுகளை இடிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு டெல்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடிக்கும் பணிகளின்போது பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 27ல், யமுனை நதியை தூய்மைப்படுத்தவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குடியிருப்புகளை இடிக்கும் உத்தரவை எதிர்த்து குடியிருப்புவாசிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.