விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மாற்று மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 75 ஆயிரத்து 190 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,248 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 957 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,905 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. ஒரு முகாமில் 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 108 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாவட்டத்தில் கிராமப்புறங்களிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 1,932 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,905 பேர் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது.