வெளிநாட்டில் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவன் - கொலை பின்னணி என்ன?

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின், மோனிப்பள்ளியை சேர்ந்த மெரின் ஜாய் என்ற 26 வயதுடைய பெண், அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, திடீரென்று மர்ம நபர் ஒருவரால் கொல்லப்பட்டார்.

பலமுறை கத்தியால் குத்தப்பட்டு மற்றும் காரால் தாக்கப்பட்டு மெரின் ஜாய் பரிதாபமாக உயிர் இழந்து கிடந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் பிலிப்மேத்யூ என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மெரின் ஜாய்யின் கணவர் என்பது தெரிய வந்தது. விசாரணையில் இவர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்து 2 வயதில் குழந்தை உள்ளது தெரிய வந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் மெரின் மற்றும் அவரின் தாய், பிலிப்பை பார்க்கவே விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிலிப் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை குழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்கமாட்டார்கள் என்று பிலிப்பிடம், ஜாய் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பிலிப் மறுநாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை அந்த ஆத்திரத்தில் குத்தி கொலை செய்ததாக பிரபல ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.